Aram Stories அறம் - ஒரு அலசல்
Sun, 09 Jul
|Zoom
அறம். ஜெயமோகனின் சிறு கதைகள் வழியே ஒரு உள்நோக்கிய பயணம்.
Time & Location
09 Jul 2023, 20:00 – 21:30
Zoom
About the event
அறம் என்பது நாம் தமிழில் பயில ஆரம்பிக்கிற பொழுது அறிமுகமாகிற சொல். திருக்குறளின் அறத்துப்பால், நாலடியார், ஆத்திச்சூடி என்றுதான் இலக்கிய வட்டத்துக்குள் அடி எடுத்து வைக்கிறோம். அப்படிப் படிப்பதாலா, இல்லை பெற்றோரும் ஊரும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதாலா, நம்முள்ளே நமக்கேயான ஒரு ஒழுக்க முறை நிலைபெற்று விடுகிறது.
வாழ்க்கை நம்மை ஒரு ஓரத்துக்குத் தள்ளும்போது தான் அறத்துக்கு நமக்குமான பிடிப்பு எத்தனை ஆழமானது என்பது புரிகிறது.
அறம் மேலெழுந்து நம் அடிமனதை நோண்டுகிற பொழுது எல்லா சந்தர்ப்பங்களிலும் சமாதானம் சொல்லிச் சமாளிக்க முடிவதில்லை. அப்படி அறம் வெடித்துத் தளும்புகிற தருணங்களின் சிறுகதைத் தொகுப்பு ஜெயமோகனின் "அறம்".
இந்தக் கதைகளின் மூலம், நம்மை உயிர்ப்பிக்கிற, நமக்கான அறத்தின் அடையாளத்தைக் கண்டடைய முடியுமா என்கிற தேடலே இந்தப் பயணம். What does the word mean to me?
"என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை", என்று இந்தக் கதைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் ஜெ. மோ. அந்த மன எழுச்சி ஒவ்வொரு சிறுகதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது. வாரம் ஒன்றாக ஊறப் போட்டு இந்த நூலை வாசிப்பது ஒரு தவம்.
அடுத்த எட்டு வாரப் பயணத்தில், அந்தத் தவத்தின் ஊடே நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு கதையும் உங்கள் அறத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதை ஆராய்வோம். இது இலக்கிய விமர்சனக் கூட்டமில்லை; தத்துவ விசாரக் கொட்டகையுமில்லை. சுய தரிசனப் பட்டறை. அறம் என்கிற கோட்பாட்டை கட்டுப்பாடுகளற்ற ஒரு வட்டத்தில் தான் தீர்ப்பின்றி அலச முடியும். அப்படியொரு அமைப்பில், ஜெயமோகனின் உயிரோட்டமுள்ள வரிகளினால் உந்தப்பட்டு ஒரு உள்நோக்கிய தேடலாய் நம் சந்திப்புகள் அமையும்.
A self exploration through dialogue. Every Sunday 11 AM - 12.30 PM from 16 July 2023 to 03 Sep 2023. Eight weeks. Six stories.
Facilitators: Maragathavalli Inbamuthiah, Social Entrepreneur, Hiker and Well-being counsellor. CoFounder Mandram.
Priya Nagesh, Yoga therapist, Published author